Friday, June 24, 2011

ரஜினி வழியில் விஜய்! - Cinema vikatan


நடிகர் ரஜினியின் படம் வெளிவந்தால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று தான் பார்ப்பார்கள். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களான 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல படங்களின் வரவேற்பின்  மூலம் விநியோகஸ்தர்கள் ரஜினியை அடுத்து விஜய் படம் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று பேசி வந்தார்கள்.

அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் ரஜினி தனது படங்களில் பண்ணும் ஸ்டைல், வசனங்கள் என  பலவற்றை தனது படங்களில் பின்பற்றினார்.

'போக்கிரி' படத்தில் வரும் 'நீ அடிச்சா பீஸ்... நான் அடிச்சா மாஸ்','ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' ஆகிய வசனங்களும், 'வேட்டைக்காரன்' படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஆட்டோ டிரைவராக நடித்ததும் இதற்கு சான்று.

ரஜினி நடித்த 'முத்து' படம் சீனாவிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் சீனாவிலும் அவருக்கும் ரசிகர்கள் உருவாகினர். 'முத்து' படத்தை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சீனாவிலும் வெளியானது.

தற்போது விஜய் நடித்த 'காவலன்' படம் சீனாவில் ஹாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது. 'காவலன்' படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பையும் , காமெடியையும் வெகுவாக ரசித்தனர்.

'காவலன்' படத்திற்கு ஹாங்காயில் கிடைத்த வரவேற்பால் ரஜினியை போலவே தனது படங்களையும் சீனாவில் வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறாராம் விஜய். அதிலும் விஜய்யின் அடுத்து வெளிவர இருக்கும் படங்கள் கண்டிப்பாக சீனாவில் வெளியாகும் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...