Monday, January 30, 2012

100 கோடியை நோக்கி !: நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் 'நண்பன்'. இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.  அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.

முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறது நண்பன். படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95% நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம்.

'எந்திரன்' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா, வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து ' நண்பன் ' படத்தின்  தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, January 27, 2012

Vijay’s Nanban collection beats Businessman!!


Heavy clash ahead at Box-office after the release of two massive films Tollywood King Prince Mahesh Babu’s Businessman and Kollywood Super Hero Vijay’s Nanban.
Vijay’s Nanban which is got positive talk all over and also getting rave reviews from all sides and breaking record collections.Prince Maheshbabu Movie The Bussinessman Released more than 1600 theater ,which also gets rave reviews from all sides and breaking record collections.
The two films challenging to one to other no one less compare with collection. Now as the trade reports Nanban collection beats Businessman.
Businessman - Total 14 Days Collections 123.2 Crores .
Nanban  - Total 15 Days Collections 125.2 Crores.

விஜய்யை புகழ்ந்த சத்யராஜ்

இளையதளபதி விஜய் கன்னத்தை கிள்ளிப் பார்க்க ஆசைப்படுவதாக சத்யராஜ் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கும் நண்பன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நண்பன் திரைப்படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நாட்டின் தலைசிறந்த நடிகர் அமீர்கான். திரி இடியட்ஸ் திரைப்படத்தில் அமீர்கானின் நடிப்பை விட நண்பனில் விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை போல விஜய் அழகான நடிகராக திகழ்கிறார். அவருடைய கன்னத்தை கிள்ளிப்பார்க்க நான் அவ்வப்போது ஆசைப்படுவேன் என்று கூறியுள்ளார்.
நண்பன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு அதிகமான சந்தோஷத்தை அளித்துள்ளதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு போக்கிரி திரைப்பட விழாவில் இந்தியாவின் புருஸ்லி என்று விஜய்யை சத்யராஜ் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி விஜய் - நான் வெறும் புல்லட் தான் ! கலக்கல் பேட்டி!


துப்பாக்கி விஜய் தான் கோலிவுட்டின் அடுத்த பரபரப்பு. துப்பாக்கி படம் விஜய் நடிக்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வர இருக்கிறது. மும்பையில் இப்போது துப்பாக்கி பட படப்பிடிப்பில் இருக்கும் விஜய் இந்த படத்தை பற்றி பெரிதும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
விஜய் துப்பாக்கி படத்தில் பெரிதும் நம்பிக்கை வைக்க காரணம் அதன் கதையே. விஜய சொல்கிறார் :

என்னை பொறுத்த வரை இந்தப் படத்தின் கதை தான் துப்பாக்கி நான் வெறும் புல்லட் தான் !

துப்பாக்கி படத்தின் கதை ஆக்ஷன் சீன்ஸ்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஸ்கிரிப்ட். இதில் விஜய்க்கும் காஜலுக்கும் மெல்லிய காதலும் இழையோடும். என்கிறது யூனிட்.இதற்கிடையே நண்பன் பட வெற்றிக்கு விஜய் இயக்குநர் ஷங்கருக்கு மனப்பூர்வமாக தன் வெற்றியை தெரிவித்துக் கொண்டார். “  முதல்வன் படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது. அப்போது மிஸ்ஸாகிவிட்டது. இப்போது ஆனால் வட்டியும் முதலும் சேர்த்து நண்பன் படம் எங்கள் இருவருக்குமே நல்ல பேர் சம்பாதித்து கொடுத்து விட்டது !” என்றார்.

நண்பன் பட மெகா கலக்ஷனை தொடர்ந்து துப்பாக்கி பட பிசினஸ் இப்போது மேலும் பரபரப்படந்துள்ளது. பல கோடிகள் தொடும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆந்திரா செல்லும் விஜய்

விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த நண்பன் படம் மாபெரும் வெற்றியுடன் தமிழகம் மற்றும் கேரளா மற்றும் ஏனைய நாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் மற்றும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தெலுங்கில் இன்று வெளியாகிறது. ச்நேஹிதுடு எனும் பெயரில் வெளியாகிறது.
இப்படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு தரமான படமாக வந்துள்ளது. இப்படம் தொடங்கும் போது பலர் இப்படம் பற்றி தவறான விமர்சனம் சொன்னனர் எனினும் அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளது நண்பன். இப்படத்தில் தெலுங்கு பாடல்கள் அண்மையில் கைதரபாத்தில் வெளியிடப்பட்டன. அங்கு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இலியான சத்தியராஜ் சத்தியன் ஜீவா சிறிகாந்த் அனுஜா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. நண்பன் ஹிந்தி மற்றும் தமிழில் வெற்றி பெற்றதை போல தெலுங்கிலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.

Thursday, January 26, 2012

நண்பன் சென்னை வசூல் மட்டும் 4.95 கோடிகள்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
1. நண்பன்
கடைசியில் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் படம் கிடைத்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.38 கோடி வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் மட்டும் 4.95 கோடிகள்.

Friday, October 28, 2011

உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்’: கௌதம் மேனன்

விஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம்  கூறித்து கெளதம் மேனன் " 'யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்’னு அவரே சொன்னார்.

நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்’!'' " என்று தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...