Sunday, October 16, 2011

விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு யு சான்று

விஜய் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சார்பில் டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலாயுதம். சூட்டிங் எல்லாம் முடிந்து இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த படக்குழுவினர், அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையிலான படமாக இருப்பதால் யு சான்று அளித்துள்ளனர். மேலும் படத்தில் சண்டைக்காட்சிகளில் மட்டும் சில வெட்டு கொடுத்துள்ளனர். மற்றபடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசிக்கும் படியான படம் என்று படக்குழுவினருக்கு தணிக்கை துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...