Monday, May 23, 2011

இலியானாவுக்கு, விஜய் முத்தம் கொடுப்பாரா...?

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் "நண்பன்". இப்படம் இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற  "3-இடியட்ஸ்" படத்தின் ரீ-மேக் ஆகும். "3-இடியட்ஸ்" படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அமீர்கானும், கரீனா கபூரும் முத்தமிடுவது போன்ற காட்சியிருக்கும். மிகநீண்ட முத்தக்காட்சியான இது, இந்தி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் அதே காட்சிகள் இப்போது தமிழில் உருவாகி வரும் நண்பன் படத்திலும் இருக்குமா...? விஜய், இலியானாவுக்கு முத்தம் கொடுப்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நண்பன் படத்தின் சூட்டிங் ‌வேகமாக வளர்ந்து வரும் நிலையில் படத்தின் கதையில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளாராம் ஷங்கர். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, குறிப்பாக விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக சண்டை காட்சிகளை எல்லாம் படத்தில் ஷங்கர் சேர்த்திருக்கிறார் என்ற தகவல் ‌வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...