Sunday, February 13, 2011

"நண்பன்" பாடல்கள் சிறப்பாக அமையும் - ஹாரிஸ் ஜெயராஜ்


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - டைரக்டர் ஷங்கரும் இணைந்தால் அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும். அந்நியன் படத்தில் இந்த கூட்டணி மிஸ்ஸிங். பாடல்கள் அத்தனையும் ஹிட் என்றாலும் ரஹ்மான் அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தையும் பெற்றன. இப்போது ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் நண்பன் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கிறார். இந்தியில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 3 இடியட்ஸில் பாடல்கள் பளீச் ரகமாக இருந்தன. அதைப்போலவே தமிழிலும் இருக்க வேண்டும் என விரும்பிய ஷங்கர், இதற்காக இசையமைப்பாளர் ஹாரிசுடன் சேர்ந்து லண்டன் செல்கிறார். இதனை உறுதி செய்திருக்கும் ஹாரிஸ், நண்பன் படத்துக்காக ஷங்கருடன் லண்டன் போகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படப் பாடல்கள் சிறப்பாக அமையும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.
ஜெமினி நிறுவன தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் என 5 நாயகர்கள் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

4 comments:

  1. i luv u vijay anna. Anna rockz forever

    ReplyDelete
  2. VIJAY IS THE REAL SUPERSTAR.I'M ONE OF HIS DIE-HARD FAN.
    VEERAM PONDRATHU UN NADAI ETHU ILAYATHALAPATHIYIN PADAI.
    THALAIVA NEE RAMCHARANODA MAGADHEERA(TELUGU)
    PADAM REMAKE PANNANUM.ETHU ENNODA AASAI.KINGLY ROLE UNAKU SUPERA IRUKUM.

    EPPA VARAVANELLAM PUNCH ADIKARANGA.
    THANGA MUDILA.
    TAMIL TIRAIULAGAI KAAKA KAVALANAI VANDHAI.
    MOKKAI HEROES KITTA ERUNDU ENGALAI KAATHU ,ETHIRIGALAI AZHIKKA VELAYUDHAMAGA VAAAAAAA.


    COME SOON WE ARE HUNGRY.

    ReplyDelete
  3. Thanks for ur comments..... we are all thalapathy gangs

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...