இதோ நடக்கிறது... அதோ நடக்கிறது என்று எக்கச்சக்க பில்டப்களுக்கு பிறகு ஒருவழியாக வரும் 21ம்தேதி விஜய்யின் வேலாயுதம் பட இசை வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர். காவலன் படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் இருந்தே வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய பேச்சு எழுந்து விட்டது. தேர்தல் நேரத்தில் ஆடியோ ரிலீஸ் விழாவை வைத்து பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த படக்குழுவினர், பின்னர் அதை கைவிட்டனர். தேர்தல் முடிந்து புதிய முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், முதல்வர் தலைமையில் விழாவை நடத்த திட்டமிட்டனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா, சினிமா சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டதால் மீண்டும் வேலாயுதம் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போனது.
இப்போது ஒருவழியாக வரும் 21ம்தேதி வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் வேலாயுதம் பட ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment