அரசியலில் நுழையும் எண்ணம் வந்த நாள் முதலே நடிகர் விஜய் அவ்வப்போது நாட்டு நடப்புகள் பற்றி அறிக்கை விடுவது, பேட்டிகளில் சாடுவது என முன்னேறிக் கொண்டிருக்கிறார். கோவையில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டபோது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு தேர்தல் நேரத்திலும் அப்போதைய ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இலங்கை விவகாரம் பற்றியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைத் தொடர்ந்து விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உரிமைகளையும் உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும் சந்தோஷத்தோடும் சரிசமமான உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment