வேலாயுதம் சூட்டிங்கில் "ஜெயம்" ராஜா தனது பிறந்தநாளை, விஜய் உள்ளிட்ட வேலாயுதம் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
டைரக்டர் "ஜெயம்" ராஜா, விஜய்யை வைத்து "வேலாயுதம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், விஜய்யின் தங்கையாக சரண்யா மோகனும் நடிக்கின்றனர். சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் "வேலாயுதம்" படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் "ஜெயம்" ராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை கொண்டாட எண்ணிய விஜய், "ஜெயம்" ராஜாவுக்கு தெரியாமல், "சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை சூட்டிங் ஸ்பாட்டில் வரவழைத்து, ராஜா உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிறகு நடிகர் விஜய், ஒளிப்பதிவாளர் ப்ரியன் உள்ளிட்ட வேலாயுதம் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ராஜா. ராஜாவுக்கு மாலை அணிவித்து, கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய்.
ஏற்கனவே விஜய், படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாளிலும், அவர்களுக்கு தெரியாமல் கேக் வரவழைத்து கொண்டாடி அவர்களை ஆச்சரியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment