திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார்.
20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் இயக்கத்தில் உள்ளனர். ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வார்கள். இயக்கத்தில், 20 முதல், 30 வயது உடைய இளம் ரத்தங்களே உள்ளனர். நாட்டில் அவ்வப்போது அரசியல் மாற்றம் வரவேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.
நடிகர் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்வது பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. மக்கள் இயக்கத்தில், 50 பேரை உறுப்பினராக கொண்ட, 47 ஆயிரம் பதிவு பெற்ற மன்றங்கள் உள்ளன. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை. இதில், சுயநலமும் இல்லை. சமீபகாலமாக நாட்டில் நடக்கும் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காரணமாக பொதுநல நோக்கில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலை விட, ஸ்பெக்டரமில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நாடு வளர்ச்சி அடைந்துள்ளதோ இல்லையோ, ஊழல் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் நிலையைப் பார்த்து ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.
மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் முதல்வராக கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் பலமுறை நலநிதி வழங்கியுள்ளேன். இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment