இன்று (14.03.2011) காலை விஜய்யின் அப்பா இயக்கத்தில் உருவாகும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. இதில் அப்படத்தில் நடித்த சீமான், சத்யராஜ் மற்றும் இயக்குனர் ஷங்கர், நடிகர் ஜீவா என பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். வருவார் என எல்லோரும் எதிர்பர்த்த விஜய் விழாவுக்கு வரவில்லை.
இவ்விழாவில் பேசிய கமலா திரையரங்க உரிமையாளரும் நடிகருமான சிதம்பரம், விஜய் அரசியலுக்கு வர வேண்டாம். அவர் சிறந்த நடிகர். அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர் என்று சொன்னார். மாபெரும் நடிகர் திலகம் சிவாஜியே அரசியலில் சறுக்கினார் என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சீமான், சத்யராஜ் பேச்சுகளில் பல இடங்களில் தீப்பொறி பறந்தது. இருவரும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். சத்யராஜ் பேசுகையில் விஜய் ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் நடிக்கிறார். அவர் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை. சிவாஜி என்ற மூன்றெழுத்து அரசியலில் சறுக்கி இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை நாம் மறந்துவிட முடியாது. விஜய்யும் அப்படி ஒரு சக்தியாக தான் இருக்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னர்.
Superb Boss
ReplyDeletevijay will win.....he will rockkkkkkk.........
ReplyDelete