வேலாயுதம் பட சூட்டிங்கிற்காக கிணத்துக்கடவு பகுதியில் முகாமிட்டிருக்கும் நடிகர் விஜய் பொள்ளாச்சிக்கு திடீர் விசிட் அடித்தார். விஜய் வருகையால் அவரது ரசிகர்கள் அடைந்த உற்சாகத்தை விட, அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள் ரொம்பவே உற்சாகமடைந்தனர். கிணத்துக்கடவு கோவில்பாளையம் பகுதியில் வேலாயுதம் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சூட்டிங்கை சீக்கிரமே முடித்துக் கொண்டு, பொள்ளாச்சிக்கு திடீர் விசிட் அடித்தார் விஜய். அங்கு காவலம் படம் ஓடும் தியேட்டர் ஒன்றிற்கு வந்த விஜய்யை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். ரசிகர்களுக்கு இணையாக அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகத்துடன் விஜய்க்கு வரவேற்பு கொடுத்து, வாழ்த்து கோஷமிட்டனர்.
பின்னர் தியேட்டரில் திரைக்கு முன் தோன்றி நடிகர் விஜய் பேசும்போது, தன் வருகையை அறிந்து ஆர்வமுடன் வந்து வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும், அ.தி.மு.க. கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கூறுகையில், நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங்ணா... சொல்லுங்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற ஊர்களில் நடக்கும் சூட்டிங்கில் கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன்படுத்துவோம். ஆனா பொள்ளாச்சியில் மட்டும்தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். காவலன் படத்தில் குத்துப்பாட்டு இல்லை என்று ரசிகர்கள் சிலர் கவலை தெரிவித்தனர். அடுத்த படத்தில் கண்டிப்பாக அந்த குறை நிவர்த்தி செய்யப்படும், என்றார்.

No comments:
Post a Comment